பகுத்தறிவு அடிப்படையில் எண்ணும் எவரும் ‘சாதி’ எனபது உண்மையன்று, எனவே, ‘வருணாசிரம தருமம்’ என்பது பித்தலாட்டம். அதன் அடிப்டையில் மதிக்கப்படும் ‘பிராமணயப் புரோகித்த்தை’ நாம் ஏற்கத் தேவையில்லை- அந்தப் புரோகிதக் கூட்டத்தின் பொய்யான உயர்வுக்குக் கருவியாக்கப்பட்டுள்ள ‘வடமொழிக்கு’ நாம் இடந்தரலாகாது. ‘வடமொழியில் அர்ச்சனை செய்வதும் நமக்குத்தாழ்வே”, ‘நமது தாய்மொழியாம் தமிழுக்கு இழுக்கு” என்று கூறுவதை ‘இந்து மத’ எதிர்ப்பாகவே அவர்களை கூக்குரல் எழுப்பக்காரணம் என்ன? ‘இந்து மதம்’ என்பது பார்ப்பனிய – வருணாசிரமதரும – வடமொழி ஆதிக்கம் வளர ரிய இனம் செய்த ஆதிநாள் ஏற்பாடே தவிர வேறன்று என்பதனால்தான்!
பார்ப்பானீயப் பித்தலாட்டம்:
பிறப்பினால் உயர்வும் தாழ்வும் பேசுவது பார்ப்பனியப் பித்தலாட்டம் என்பதை அந்த நாள்களிலேயே அறிந்து உரைத்தவர் பலர். வடநாட்டிலேயே, புத்தர் காலத்திலேயே அதற்கு மறுப்பு எழுந்தது. அதனால்தான் போலும், ”ஜனமனா ஜாயதே சூத்ரஹா” (Janmana Jaythae Sudraha) என்று ஒரு சுலோகம் உபநிடத்த்தில் இடம் பெற்றுள்ளது. அதன்படிப் ‘பிறவியினால் எல்லோரும் சூத்திரர்களே என்று பொருள் கூறப்படுகிறது.
அப்படியானால், பூணூல் தரித்தால்தான் பிராமணன், சத்திரியன், வைசியன், ஆகிய மூன்று மேல் சாதியினரும் – அந்தந்தச் சாதியினராக ஆகும் உரிமையும் தகுதியும் பெறுவர் என்று விளக்கம் கூறுகின்றனர். அந்து மூன்று வகுப்பாரும் இரு உரிமை யார் யாருக்கு உண்டெனில், பிராமணருக்கும் – சத்தரியருக்கமு – வைசியருக்கும் பிறந்தவர்கட்குத்தான். சூத்திர்ருக்குப் பிறந்தவருக்க்கப்பூணூல் தரிக்கும் உரிமை இல்லை. அவர் தம் பிறவி இழிந்ததாதலின் – ‘பூணூல்’ தரிக்கச் சடங்கு செய்யும் (அணிவிக்கும்) அந்த உரிமை பூசுர்ர்க்குக மட்டுமே உண்டு.
எனவே- எல்லோரும் பிறவியால் சூத்திர்ர்களே என்பதுங்கூடப் பூணூல் தரிப்பதன் முக்கியத்துவத்தையும், அதைத் தரிப்பதற்கு உரிய சடங்கு செய்விக்கும் புரோகித்த்தின் உரிமையையும் நிலைநிறுத்தவே பயன்பட்டு, வருண – சாதி முறையை மறக்காமல் பின்பற்றி, பார்ப்பானிய்ப பிறவி உயர்வினை மற்ற வகுப்பார் ஏற்றுத் தலைவணங்கி நடந்திடவே துணை செய்வதாயிற்று. ‘பிறவியினால் எல்லோரும் சூத்திர்ர்களே’ என்பது உண்மையில் ஒப்புக் கொள்ளப்பட்டால், பிராமணன் மகனுக்குக் கிடைக்கும் உரிமை – சூத்திரன் மகனுக்கும் கிடைக்க வேண்டுமல்லவா? ஏன் இல்லை? பிறக்கும்போது எல்லோரும் ஒன்றே எனில் உரிமைகளும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் இல்லை?
வேதம் படிக்கவும், படிப்பிக்கவும் – பிராமணர்கட்கே உரிமை என்றும் செய்து கொண்ட ஆரியதர்ம ஏற்பாடுகளைக் காப்பாற்றி ஆதிக்கம் செலுத்தவே – அதற்கு வழி செய்யும் ஓர் அமைப்பாகவே – இந்து மதம் என்னும் ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொண்டனர்.
மனிதனாக வாழச் செய்தவர்;
எனவே, மனிதனை மனிதனாக வாழச் செய்திட,எண்ணத்தால் தாழ்ந்து, நம்பிக்கையால் ஏமாந்து, உழைப்பால் மெலிந்து, நாயினும் கீழாய் நடத்தப்பட்ட மக்களை தலைநிமிரச் செய்திட – அதற்குரிய வழிகாண முற்பட்ட தந்தை பெரியார் அவர்களை ‘இந்து மதம்’ என்னும் பெயரால் உருவாக்கப்பட்ட வஞ்சக வலையை – ஆரிய மாயையை அகற்றிடவும் ஒழித்திடவமு அயராது பாடுபட்டார்.
பகுத்தறிவுக் கண்கொண்டு நோக்கினால் அன்றி, உண்மை ஒளி காணமாட்டார்கள் என்றுதான் அந்தக் கருத்துகளைப் பரப்பினார்.
‘இந்து’ என்னும் சொல், ஒரு வட்டாரத்தில் வாழ்ந்த மக்களைக் குறித்திடப் பயன்பட்டதொரு சொல்லாக இருந்து, நாளடைவில் (பல நூற்றாண்டுகளில் ) இந்தியாவில் வாழும் முசுலீம் அல்லாதாரைக் கிறத்துவர் அல்லாதாரைக் குறிப்பிடும் பெயராக வழங்கத் தலைப்பட்டது.
ஹிந்து – (Hindu) ஹிந்தூய்சம் (Hinduism) என்னும் பெயர்களுக்கு மூலமாக உள்ள ஹிந்த் (Hind) என்னும் பெயர் சிந்த் (Sindh) என்னும் பெயரின் திரிபாகவே உருவானதாகும். இந்த வேர்ச்சொல் பர்சியன் மொழியில் இடம்பெற்றுள்ளது. இதனை இந்தி மொழியின் வல்லுநர்களை ஆசிரியர்களாகக் கொண்டு, வாரணாசியில் அமைந்துள்ள ‘நாகரிக பிரச்சாரிணி சபா’வினால் வெளியிட்டுள்ள ‘இந்தி சப்த சாகர்’ என்னும் இந்திமொழி அகராதியில் காணலாம்.
‘இந்து’ என்னும் சொல்லுக்கு:
‘இந்து’ (Hindu) என்னும் பர்சியன் சொல்லுக்கு இவையே பொருள்களாகத் தரப்பட்டுள்ளன.
1. கருப்பு – விகாரம்.
2. பண்பாடற்ற முரடன்.
3. ஒரு கொள்ளைக்காரன்.
4. இந்தியாவிற்குச் சொந்தமானது.
‘இந்து’ அல்லது ‘சிந்து’ என்பது, இந்தியாவிற்குச் சொந்தமான எதற்கும் வழங்கிய பெயர். கொள்ளையடிப்பவரையும் – பண்பாடற்றவரையும் குறிக்கவும் – பர்சியர்களை நோக்கக் – கருப்பாகவும் அழகில்லாதவராகவும் இருந்த சிந்து ந்திக்கரையில் வாழ்ந்த மக்களைக் குறிக்கவும் பயன்பட்டது. அப்பெயர் என்பதை ‘இந்தி மொழி வல்லநர்களே’ தமது மொழி அகராதியில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்ட ஒரு கூட்டம் – அநாகரிகமான கூட்டமாக இருந்த காலத்தில் – அதாவது அந்தப்பகுதியில் ஆரியர்கள் குடியேறி வாழத் தலைப்பட்டிருந்த காலத்தில் – பண்பாடு, நாகரிகம் அவர்கள் வாழ்ந்த இடத்தால் வழங்கிய பெயரே – பின்னர் இந்தியாவில் வாழ்ந்த இடத்தால் வழங்கிய பெயரே – பின்னர் இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு இன, மொழி, நாகரிக மக்களையும் அவர்தம் வேறுபட்ட பழக்க வழக்கங்களையும் சேர்த்துக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஆகியுள்ளது.
இந்து ஒரு மதப்பெயரா?
உண்மையில் ‘இந்து’ என்பது மதப் பெயர் அன்று. இடத்தின் வழி வடிவுபெற்ற பெயர். வெவ்வேறு கொள்கையுடையோரையும், தனித்தனியாகப் பிரித்துக் காணும் தெளிவும் திறமும் இல்லாத அந்நியரால், தொகுத்துச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அவ்வாறே நம்முடைய நாட்டிலும் பின்னர் வழங்குவதயிற்று. எனவே , ‘இந்து’ மதம் என்பதன் பேரால் – வருணாசிரம
தரும்ம் வற்புறுத்தப்படுவது, நமக்குப் பொருந்தாது என்பது மட்டுமன்றி, முறையற்ற அநீதியுமாகும்! தமிழர்கள் – தென்னாட்டார் – திராவிட இனத்தார் வடநாட்டில் ஆரியர்களின் நாகரிகம் வளரத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்திருந்த தொல்குடிகள் (முண்டா மக்களும், திராவிட இன மக்களும்) ஆகியோருக்கு – பார்ப்பானிய – வைதிகப் பிராமணர்கள் அடிப்படையிலான மதக்கொள்கைகள் – சாதி ஆசார சடங்குகள் யாவும் அந்நியமானவை, தமது இன எதிரிகளால் வடிவு தரப்பட்டவை எப்படி நோக்கினும் இலை எல்லாம் அறிவுள்ள மனிதன் ஏற்காதவை. தமிழர் வாழ்வுக்குக் கேடும் – முன்னேற்றத்துக்குத் தனையுமானவை; மானமுள்ள தமிழன் – தன்மானம் உணர்ந்த தமிழன் எவனும் எதிர்த்து ஒழித்திடவேண்டியவை.
அப்படிப்பட்ட அடிப்படையை, வரலாற்றுக் க்ண்ணோட்டத்தில் அறிஞர் பெருமக்களே அறியக்கூடிய உண்மைகளை, நமது நாட்டுப் பாமர மக்களும் உணரக்கூடிய வகையில் தகுந்த விளக்கத்தோடு எடுத்துரைத்துத் தன்மான உணர்வும் – பகுத்தறிவுப் பக்குவமும் ஏற்படுத்திய தந்தை பெரியாரின் தொண்டு ஈடு இணையற்ற செயலாகும்.
எதையும் எதிர்பாராது தமிழன் எண்ணத்தில் தெளிவும் எழுச்சியும் பிறந்திட, எண்ணற்ற இன்னல்களை ஏற்றுக்கொண்டு தந்தைப் பெரியார் ஆற்றிய அரும்பணி ஈடு இணையற்றதாகும்.
தமிழர்களாக வாழ உறுதி கொள்வோம்!
அப்படிப்பட்ட பெரியாரின் நினைவைப் போற்றும் நாளில், வைதிகப் பார்பானிய ஆதிக்கத்தை அகற்றவும், ஆரிய – வடமொழிகளின் ஆதிக்கம் நாட்டும் முறைகளை – சடங்குகளை மாற்றி அமைக்கவும் உறுதி கொள்ளவேண்டும். நாம் ‘சாதி’ முறையை வெறுத்த ‘தமிழர்களாக’ – ஒன்றே குலம் என்று உணர்ந்தவர்களாகவும் ஆக வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தச் செம்மல் தலைமையில் பல்லாயிரம் இளைஞர்கள் பகுத்தறிவுப் படையின் தொண்டர்களானதன் மூலம் தமிழ்நாட்டில் நிலவிய நச்சுக்காற்று, மூடநம்பிக்கையின் முடைநாற்றம் மாற்றப்பட்டு ஒரு புதிய மூச்சுக்காற்று பரவலாயிற்று. அந்தப் புதிய மூச்சினை நுகரும் நிலை பெற்றதாலேயே தமிழகம் தலை நிமிர்ந்தது என்றால் அது மிகையாகாது. தந்தை பெரியார் அவர்களே தமிழக மக்களின் ‘புதிய மூச்சு’ ஆனவர். மக்களின் வாழ்வின் உயிர் மூச்சாக நிலைத்தவர்.
நம் ஒவ்வொருவர் மூச்சோடும் கலந்து நம் உடலோடும் அறிவோடும் உணர்வோடும் கலந்துவிட்ட அந்தப் புதிய மூச்சு இனியும் நம்மை விட்டுப் பிரிவதுண்டோ?
அறிவச் சுடர்! பகுத்தறிவுப் பரிதி! சுயமரியாதை கண்ட திராவிடத் தந்தை! நாலரைக் கோடி மக்களின் கருத்துக் குருட்டினை நீக்கிய சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்.
ஆம்! தந்தை பெரியார் இன்றேல் – அறிஞர் அண்ணாவும் இல்லை – திராவிடர் இயக்கமே இல்லை! நமக்கு வழிகாட்டுவதற்கு வேண்டிய துணிவும் தெளிவுமிக்க மற்றொரு தலைவன் இல்லை! நாமும் மானம் உணராத மதிக்கெட்டதொரு கூட்டமாகத்தான் திரிந்திருப்போம்! எனவே நம்மை – மனிதரக இனம் உணர்ந்தவராக – வாழ்வித்த வித்தகர் பெரியாரின் குறிக்கோள் மறவாது பணியாற்ற உறுதிகொள்வோம்!
வாழ்க பெரியார்! வளர்க அவரது குறிக்கோள்!!