மனித வாழ்வும் அறிவும்:
தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள்.
துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய – அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார்.
அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும் – தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் பலவற்றையும் படித்து, அவற்றையும் தமது அறிவுகொண்டு ஆராய்ந்து, அவற்றின் நன்மையும் தீமையும் தெளிந்து மக்களுக்கு விளக்கி உரைத்தார்.
எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கூறியதாயினும்- எவ்வளவு போற்றப்படும் ஏட்டில் கண்டதாயினும்- தமது அறிவுக்குச் சரியென்று தோன்றாத எதனையும் ஏற்க மறுத்தார் என்பது மட்டுமன்றி, எதிர்க்கவும் – கண்டிக்கவும் பின்வாங்கவில்லை.
எதுவானாலும் – அது ஏன்? எதற்காக? எப்படி? என்ன பயன்? என்னும் கேள்விக்கு அவற்றை இலக்காக்கினார்.
மனித வாழ்வு – அறிவை அடிப்படையாக்க்கொண்டே நாளும் வளர்ச்சி பெறுவது. ஆதி நாள்களில் மனிதன் எத்தனையோ துன்பங்களுக்கிடையில், உயர்க் கேடுகளுக்கிடையில், தனது அறிவைப் பயன்படுத்தி, உயிரைக் காத்துக்கொண்டு முன்னேற்றம் கண்டான். அந்த அறிவு வளர்ந்து – விரிந்து பல துறைகளில் பயின்று, ஆழ்ந்து நுணுகி ஆராயும் திறம் பெற்று, மனித வாழ்வை மேலும் மேலும் மேம்பாடு அடையச் செய்து வந்துள்ளது.
அறிவே வளர்ச்சிக்கு அடிப்படை:
குகைகளிலும், மரக்கிளைகளிலும் தங்கி இருந்து – மரப் பட்டையும் தழையும் உடுத்து – வனவிலங்குகளை வேட்டையாடி – சக்கிமுக்கிக் கல்லைக்கொண்டு கனல்மூட்டி -வெந்ததைத் தின்று வாழ்ந்த மனிதன் – பேச்சுமொழி வளர்ந்து, குடும்ப வாழ்க்ககையும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையும் கண்டு, வேளாண்மையில் தேர்ந்து, வாணிகத்தில் வளர்ந்து, ஆட்சி முறை கண்டு, விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இன்றளவும் பெற்றுள்ள வளர்ச்சிக்கு அடிப்படை அவனது அறிவே.
குகையில் வாழ்ந்து மனிதன் வழி வந்தவன்தான் விண்வெளியில் வலம் வருகிறான். சக்கிமுக்கிக் கல்லைத் தேடியவன் வழியன்ன்தான் சந்திரமண்தலத்தில் இறங்கி ஆராய்ச்சி நடத்துகிறான். இந்த அறிவினைப் பயன்படுத்தாதவர்களாக – அதனைக் கைகொண்டு செயற்டாதவர்களாக – மாறாகப் பழைய நிலையில் விளைந்த எண்ணங்களை – கருத்துகள்- இவற்றினின்றும் விடுவித்துக்கொள்ளாதவர்களாக வாழுகின்ற மக்கள் மிகப் பலர் அவருள்ளும் நம் நாட்டவர்களே பெருந்தொகையினர். இந்த நிலையை – இழிநிலையைக் கண்டறிந்த பெரியார் அவர்களை, – அந்த நிலையை மாற்றிவிடும் பெரும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.
சாதி ஒரு சூழ்ச்சிப் பொறி:
”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது – காணக்கூடாது – தீண்டக்கூடாது” – என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார்.
”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது.
அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை இழிவுபடுத்தும் அநீதியைக் கண்டித்தார்.
இது வருணாசிரம தருமம் அல்லவோ? நால்வகைச் சாதி முறையைத்தானே நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்? அதுவும் தவறா? என்றனர், வருணாசிரம மனப்பான்மையினர்.
அது எப்படி உண்மையாகும்? பிறப்பிலே உயர்வும் தாழ்வும் இயற்கையில் எப்படி இருக்க முடியும்? அது செயற்கைகயாக்க் கற்பிக்கப்பட்டதுதானே! சாதிப்பாகுபாடே ஒரு சூழ்ச்சிப்பொறி, முறைகேடு, அநீதி என்றார் பெரியார்.
அதுவே, வேதமும் ஆகமங்களும் கீதையும் உணர்த்திடும் உண்மை, – கண்ணன் படைப்பு நால்வகைச் சாதி என்றனர்.
அந்த வேதமும் கீதையும் அறிவுக்கு ஒத்தனவல்லவே? அவை உரைக்கும் கருத்து ஆரியத்தைக் காக்க வகுக்கப்பட்ட சதித்திட்டம் அதை ஏற்பது மடமை – எதிர்ப்பதே என் கடமை என்றார் பெரியார்.
இதிகாசங்கள் முதற்கொண்டு மனுநீதி சாத்திர்ம வரையில் வற்புறுத்தும் முறையாயிற்றே வருணாசிரம்ம் என்றனர். அதனால்தானே தமிழர்கள் அடிமைகளாக, தாசர்களாக ஆக்கப்பட்டனர். எனவே, அவற்றை ஒழித்தால்தான் – தமிழன் தலைநிமிர முடியும் என்றார் பெரியார்.
இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு செய்தவன் கடவுளாகமாட்டான். இப்படிப்பட்ட கட்டளை இடுவது தெய்வம் ஆகாது. இதை மீறுவது பாவம் என்றால் நான் அதனை ஏற்கத் தயார்! என்றார் பெரியார்.
இதுதான் நாத்திகம், கடவுளை நம்பாதவர் பேச்சு என்றனர், ஆத்திகர்.
இப்படிப்பட்ட பேதங்களை வளர்க்கும் கடவுளை நம்பிவதைவிட, நாத்திகனாக இருப்பதே மேல்; நான் நயவஞ்சக ஆத்திகனாக இருக்க விரும்பவில்லை – என்றார் பெரியார்.
இப்படியெல்லாம் கடவுள் நிந்தனை செய்பவர்கட்கு இரவுரவாதி நரகந்தான் சம்பவிக்கும் என்றனர் வைதிகர்கள்.
சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு, பிறப்பிலே இழிவை ஏற்றுக்கொண்டு கண்ணுக்குத் தெரிந்த இவ்வுலகில் கருத்தறிந்தும் அநீதியை ஏற்றுக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக அழிவதைவிடக் கண்ணுக்குத் தெரியாத – யாருங்காட்டாத இரவுரவாதி நரகம் எவ்வளவோ மேல் என்று சுடச்சுடப் பதில் அளித்தார் பெரியார்.
எதிர்ப்புகளே – எரு ஆயிற்று!
தந்தைப் பெரியாரின் ‘அறிவு’ இப்படித்தான் நீதி – நியாயத்துக்குத் துணிச்சலுடன் வாதாடியது. அதைக் கண்ட வைதிகர்கள் அவரை – பிராமண துவேஷி – மத நிந்தகர் – சாத்திர விரோதி – நாத்திகர் என்றெல்லாம் கடுமையாக்க் கண்டனம் செய்தனர்.
தீண்டாமையை எதிர்த்த தீர்ர்,
சாதி வேற்றுமையைச் சாடிய வீர்ர்,
மத நம்பிக்கையைத் தகர்த்த அறிஞர்,
சமத்துவ சகோதரத்துவ்வாதி,
மனித இன உரிமைக் காவலர்,
நீதிக்காக்க் கடவுள் த்த்தவ்வத்தையே ஆராய்ந்தவர்
என்று பாராட்டவேண்டிய தகுதியுடையவரைத் தமது ஆதிக்கம் பறிபோகிறதே என்னும் ஆத்திரத்தில், அவர் கருத்துகளைப் பரவ விடாமல் தடுக்க – அவரைக் குறித்து எப்படிச்சொன்னால் மக்கள் அஞ்சுவார்களோ, அப்படியெல்லாம் தூற்றி உரைக்கலாயினர்.
பெரியார் அவர்களைப் பேய் – பூதம் – பிசாசு என்றுதான் அவர்களை அர்ச்சிக்கவில்லை. ஆனாலும், அவற்றைப்பற்றி எண்ணிடும்போது மக்கள் அஞ்சுவது போன்று இவரைப்பற்றி எண்ணும்போதே அஞ்சவேண்டும் என்று கருதினர். ஆனால் பெரியார், ‘மக்கள் அறியாமையில் வளர்த்த எண்ணமே, பேய்- பூதம்- பிசாசு’ எனம் கற்பனைகள் என்று அவை குறித்தும் மக்களுக்கு விளக்கமளிக்கத் தவறவில்லை.
பெரியார் அவர்களை அந்தக் கண்டனங்களைக் கண்டு அஞ்சிக் கலங்கவில்லை; மாறாக அதனேயே உண்மையைத் தெளிவுபடுத்தும் தமது பணிக்குக் கிடைத்த பாராட்டாகக் கொண்டார். தமது கொள்கைப் பயிர் வளர அதையே – எருவாகப் பயன்படுத்தினார்.
பெரும்பான்மையான நாட்டு மக்கள் வைதிகர் எதை வெறுக்கின்றார்களோ அதுதான் தமது உரிமை – நியாயம் – நீதி என்றும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.
ஆரிய இன – மத – சாதி ஆச்சார அடிப்படைகளை யாவும் தகர்க்கப்பட்டான்றித் – தமிழன் – திராவிடன் அறிவு வழிப்பட்ட உரிமை உள்ள சமத்துவ வாழ்வு பெறமுடியாது என்பதைப் பெரியார் தெளிவுபடுத்தினார்.
மேலும் பழையனவோ, புதியனவோ எவையாயினும் அறிவுக்கு ஒவ்வாத – பய9 இல்லாத அத்தனையையும் பெரியார் எதிர்த்தார். அப்படி அவர் எதிர்ப்பதை – ஏற்காதவர்களைபற்றி அவர் கவலைப்பட்டதில்லை. தாம் அவற்றை எதிர்ப்பதனால் அவற்றைப்பற்றிப் பலர் சிந்திக்க முற்படும் அந்த அளவிற்கு அது பயன்தரும் என்றே கருதினார்.
பெண்ணுரிமைக்கு ஒரு குரல்:
பெண்ண்டிமை தீர்ந்தால்தான் – மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் – பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி – ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார்.
பெண்கள் பாவப்பிறவிகள் என்பதாக்க் கருதி அவர்களைத தேவதாசகளாக – விற்பனைப் பண்டமாக – பிள்ளை பெறும் இயந்திரமாக – தொண்டு செய்யும் தகுதியன்றி வேறு தகுதியற்றவராக – விதவையாகிவிட்டால், மறுமண உரிமை யற்றவராக – சொத்துரிமை இல்லாதவரக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றுவதற்கான புதிய சிந்தனையை வளரச் செய்தார்.
புரோகிதச் சடங்குகள் நீக்கிய திருமணம்,
சாதி வேற்றுமை ஒழிக்கும் கலப்புத் திருமணம்,
விதவைப் பெண்ணின் மறுமணம்
முதலாக மனித வாழ்வில் இடம்பெறும் தலையாய திருமண நிகழ்ச்சியைச் சமுதாய மாற்றத்துக்கான உரிமை உணர்வு தழைக்கும் முறையில் நடத்தும் புதுமை வழிகண்டார்.
நீத்தார் நினைவு நாளாயினும், அந்நிகழ்ச்சியிலும் பகுத்தறிவுச் சிந்தனை இடம்பெறும் வழிகண்டார்.
மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்த்தின் பிடிப்பும், அதனால் ஏற்படும் மனப்பான்மையும் தகர்க்கப்படுவதுற்கு வழி காணும் பணியே அவரது பணியாயிற்று.
ஒழுக்கம் – நேர்மை – உண்மை – கடமை – தரும்ம் – புண்ணியம் – கல்வி – கற்பு – திருமணம் முதலான பல்வேறு பொருள் குறித்தும் – அவற்றின் அடிப்டையை – அவை மதிப்பீட்டையும் அப்படியே ஒப்புக் கொள்ளத் தேவையில்லை என்பதும், மனிதனின் அறிவு தெளிவடைய அவையெல்லாம் மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்பதுமே அவரது நோக்கமாயிற்று.
பெரியாரின் குறிக்கோள், எல்லோரும் ஒரு குலம் – ஒரு சம்ம்- ஒரு நிறை என ஒக்கலாக வாழ்வதற்குத் தடையாக – இடையூறாக உள்ள எதனையும், அறிவு வழியில் தகர்த்து எறிந்து சமத்துவ- சுயமரியாதை வாழ்வை அனைவருக்கும் உரத்தாக்குவதே எனலாம்.
முழு மனிதர் பெரியார்!
அவரது அறிவும், ஆற்றலும்; கொள்கையும், குறிக்கோளும்; கருத்தும், விளக்கமும்; தெளிவும், நுட்பமும்ந எழுத்தும், பேச்சும்; தொண்டும், தியாகமும் – அவர் மட்டும் வேறு ஓர் இனத்தில் பிறந்திருந்தால், இன்றைக்குள்ள மக்களிடையே வளரும் மனக்கசப்பையும், வகுப்புப் போராட்டங்களையும், தொல்லைகளையும் – துயர விளைவுகளையும் மாற்ற ஒரு ‘சகத்குரு’ வாக்க்கூடப் போற்றப்ப்ட்டிருப்பார். போற்றப்பட்டிருந்தாலும் – பெரியார் அதையும் கண்டித்து காரணத்துடன் விளக்கியிருப்பார். ஆம்! அவர் ‘தான் ஒரு மனிதன்’ – எல்லோரையும் போல ஒருவன் – என்று விளக்கியுரைத்து, அதிலே ‘மனிதை மனிதனாக ஆக்கிடும் அறிவு’க்குத்தான் தலைமை என்று அறிவுற்த்துவார்.
ஆம்! பெரியார் ஒரு மனிதன் – முழு மனிதன் – நிறைவுடைய மனிதன் – அறிவைப் பயன்படுத்தி வாழ்ந்த மனிதன்- மனிதர்களையெல்லாம் தமக்குச் சம்மாக மதித்த மனிதன் என்று அவரை மதித்துப் போற்றுவதையும், அந்த அறிவு நெறியைப் பின்பற்றுவதையுமே அவர் விரும்பினார் என்பதை நாம் மறத்தலாகாது.
வாழ்க பெரியார்!
வளர்க மனித நலம்!